• Nov 19 2024

இலங்கை சம்பவம் தான் இங்கையும் நடக்க போகுது- கொந்தளித்த மதுரை முத்து- நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக வடக்கில் இருந்து வரும் இந்தியர்கள், தமிழர்களை மட்டமாக நினைப்பதாக ஒரு கருத்து சமூக வலைத்தளத்தில் உலாவி வருகின்றது. இதற்கு அண்மையில் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் "வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்.நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என பதிவிட்டுள்ளார்.


இவருடைய கருத்திற்கு ஆதரவாகப் பலர் கருத்துத் தெரிவித்து வந்தாலும் பிரபல காமெடி நடிகரான மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிறகு ஏன் விஜய் படத்தை வெளியிடக் கூடாது என்று சொன்னார்கள்? உழைக்கட்டும். ஆனால் ஆள நினைக்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படியான ஒரு நிலையில் மீண்டும் ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் வட மாநிலத்தவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த மோதலுக்கு காரணம் மாணவர்கள் அதிகமான சாப்பாடு கேட்கின்றார்கள் என்றே கூறப்பட்டது. 

ஆனால் மாணவர்கள் சாப்பாடு அதிகமாகக் கேட்டு சண்டை பிடிக்கவில்லையாம். அந்தக் கல்லூரி மாணவிகளை வட மாநிலத்தவர் கேலி செய்துள்ளார்களாம். இதனால் மாணவர்கள் தட்டிக் கேட்ட போது அது பெரிய மோதலாக வெடித்துள்ளதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர். இப்படியான ஒரு நிலையில் நடிகர் மதுரை முத்து கொந்தளித்து பேசியிருக்கிறார்.


அதில் நம்ம மக்கள் பிற மாநிலங்கள் நாடுகளில் வாழ்கின்றார்கள் இப்படியா ரௌடிசம் பண்ணுகின்றார்கள் ஓரளவுக்கு தான் பொறுக்க முடியும். இலங்கையில் நடந்தது போல நம்ம ஊரில் நடக்க வெகு தூரம் இல்லை. மிகவும் கவனம் என்று கூறியுள்ளார்.அத்தோடு இந்த சம்பவம் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement