• Sep 20 2024

லியோ வெற்றி விழாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! பார்ப்போரை சிலிர்க்க வைக்கும் காட்சி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா ஆரம்பமான நிலையில், ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் தளபதி விஜய் வீறுநடை போட்டு குறித்த விழாவிற்கு வருகை தந்துள்ளார். 

இந்த நிலையில், லியோ படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தையும் விழாவிற்கு வந்த நிலையில் மேடைக்கு வந்த குழந்தையை விஜய் ஓடிச் சென்று தூக்கிய காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.

குறித்த வெற்றி விழாவில் பங்கு கொண்டுள்ள பிரபலங்களின் வருகை மற்றும் அவர்களது புகைப்படங்கள், அவர்கள் பேசிய பேச்சுக்கள் என அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

மேலும், லியோ படத்தின் வெற்றி விழாவிற்கான  முன்னேற்பாடுகள், கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில், அதிகப்படியான கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கவும்,  அசம்பாவிதங்கள் நேராமல் இருக்கவும் பொலிசாரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறான நிலையில், லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த சிட்டுவும் குறித்த மேடைக்கு வந்துள்ளார். குறித்த குழந்தையை மேடையில் வைத்து தன் சொந்த மகளை தூக்குவது போல மிக அழகாக குழந்தையை விஜய் தூக்கிய காட்சி பலராலும் ரசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குழந்தையின் சொந்த அப்பா அம்மாவும் குறித்த விழாவில் பங்கு கொண்டுள்ளனர்.

இதேவேளை, லியோ சக்ஸஸ் நடக்கும் அரங்கம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரங்கில் கூடியுள்ள ரசிகர்களும் லைட் அடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement

Advertisement