தனது திறமையால் சன் மியூசிக் மட்டுமல்லாமல், சன் டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வந்தார் மணிமேகலை.லாரன்ஸ் மாஸ்டரிடம் நடன உதவியாளராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹூசனை திருமணம் செய்து கொள்ள மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவீட்டாரின் சப்போர்ட் இல்லாததால், இவர்கள் இருவருமே கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர். திருமணத்திற்கு பின் விஜய் டிவிக்கு வந்த மணிமேகலை மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் ஷோவில் கலந்து கொண்டு ஒரு சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். குக் வித் கோமாளி முதல் இரண்டு சீசன் முடிந்தநிலையில், மூன்றாவது சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்ட,மணிமேகலை திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலைலையில் தனது யுடியுப் சேனலில் பிஸியாக இருக்கும் மணிமேகலைக்கு பிறந்தநாள்.அவர் தனது இன்ஸ்டாவில் தனது பிறந்தநாளை தெரிவித்து எனக்கு இப்படியா நடக்கனும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்.அதாவது காலையிலே அவர் எங்கோ சென்று கொண்டிருக்கும் போது அவருடைய காரின் டயர் பஞ்சராகிவிட்டது.இதைப் பற்றி அவர் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ...
Listen News!