• Nov 17 2024

ஸ்ருதி காதலர் கூறிய தகவல்-ஷாக்கடைந்த ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் – சரிகா தம்பதியரின் மூத்த வாரிசு ஸ்ருதிஹாசன். 2009ல் ‘லக்’ எனும் ஹிந்தி படத்தில் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார்.

சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழிலும் நடிகையாக அறிமுகமானது அவருக்கு பெரும் திருப்பத்தை கொடுத்திருந்தது.

இவ்வாறு தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிஸியாக இருந்தாலும் தனது வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொண்டவர்.

இவர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

ஸ்ருதி ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்து அதன் பின் பிரேக்கப் செய்துவிட்டார். அதற்கு பின்னர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவருடன் காதலில் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சாந்தனு அளித்த ஒரு பேட்டியில் அவரிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்..

"ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக இந்த சமூகத்தில் இருக்கும் பல விஷயங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. நான் எப்போதும் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறேன். அதை புரிந்துகொள்ளும் பார்ட்னர் கிடைத்து இருக்கிறார்"

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement