• Nov 10 2024

சிம்புவிற்கு திருமணமா...? பொண்ணு இவர் தானா...? இணையத்தில் வைரலாகி வரும் தகவல்..

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு சிறு வயதிலிருந்து சினிமாவில் பயணித்து வரும் ஒருவர். இவர் டி. ராஜேந்தருடைய மூத்த மகனாவார். இவர் தனது நடிப்பின் மூலம் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். 


இவர் தனது சொந்த வாழ்க்கையில் பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். குறிப்பாக நடிகை நயன்தாரா மற்றும் நடிகை ஹன்சிகா ஆகிய இருவரிடமும் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் இவருடைய இந்த இரண்டு காதலும் கரை சேராமல் போய்விட்டது.


40 வயதை தாண்டி விட்ட இவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். இவர் காதலித்த நடிகை நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகிய இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


சிம்புவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாவதும் அதனை நடிகர் சிம்புவும் அவரது குடும்பத்தினரும் மறுப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இவருடைய திருமணம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 


நடிகர் சிம்பு இலங்கையை சேர்ந்த தன்னுடைய ரசிகை ஒருவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மருத்துவம் படித்துள்ள இந்தப் பெண் நடிகர் சிம்புவின் நீண்ட நாள் ரசிகை என கூறப்படுகிறது. 


பலமுறை நடிகர் சிம்புவையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து இருப்பதாகவும் இவரை சிம்புவின் பெற்றோருக்கும் பிடித்து போகவே இவரை சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.


விரைவில் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. சிம்பு திருமணம் செய்துகொள்ள இருக்கும் ரசிகை மருத்துவர் மட்டுமில்லாமல் மாடல் அழகியாகவும் சில விளம்பர படங்களிலும் கூட அவர் நடித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.


ஆனால் அவருடைய பெயர் விவரம் மற்றும் புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement