• Sep 20 2024

திடீரென செம சைலன்ட்டாக திருமண நிச்சயதார்த்த விழாவைக் கொண்டாடிய இரும்புத்திரை திரைப்பட பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இரும்புத்திரை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் பி.எஸ் மித்ரன். இந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இத்திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக தற்பொழுது உயர்ந்துள்ளார். தொடர்ந்து நடிகர் கார்த்திக்கை வைத்து சர்தார் என்ற ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில் இவருக்கும் ஊடகவியலாளர் அஷமீரா ஐயப்பன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரே கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென செம சைலன்ட்டாக இந்த நிகழ்வை முடித்திருக்கிறார் என்பதனால் மேயாதமான், ஆடை மற்றும் சந்தானத்தின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள குலு குலு படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மாலையும் கழுத்துமாக மித்ரன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனால் பிரபலங்களும் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement