• Sep 20 2024

கேரளா கோவிலுக்கு புதிய யானையை பரிசளித்த 'ஜவான்' பட நடிகை! அந்த யானையில் இப்படியொரு ட்விஸ்டா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ப்ரியாமணி . 

இதை தொடர்ந்து இவர் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பருத்தி வீரன் திரைப்படம் தான். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதினையும் பெற்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார். இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே 2017ம் ஆண்டு முஸ்தப்பா ராஜ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் சில காலம் சரியான படவாய்ப்புகள் அமையாமல் தவித்து வந்தார்.


அண்மையில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நடித்து இருந்தார். மேலும் வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். 

இந்த நிலையில், கேரளாவில் உள்ள மகாதேவா கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் நடிகை பிரியாமணி.

இவ்வாறு, அவர் வழங்கிய இயந்திர யானைக்கு மகாதேவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


அதேவேளை கடந்த சில ஆண்டுகளாக பீட்டா அமைப்பு உயிருள்ள யானைகளுக்கு பதிலாக ரோபோ யானையை தானமாக கொடுக்க முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது. இதன் அடிப்படையிலேயே இயந்திர யானையை நன்கொடையாக வழங்கியுள்ளார் ப்ரியாமணி.

மேலும் அவர் கூறுகையில், டெக்னாலஜி வளர்ந்து வரும் காலத்தில் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இயந்திரங்கள் மூலம் கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க வேண்டும். 

அந்த எண்ணத்தில் தான் இயந்திர யானையை பீட்டா அமைப்புடன் சேர்ந்து நன்கொடையாக வழங்கினேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement