விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவான படமே 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. இப்படமானது அனைத்து முரண்பாடுகளையும் மீறி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படமாகும். குறிப்பாக 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீரி பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியதே இப்படத்தின் உடைய மையக் கதையாகும்.
இப்படத்தைப் பொறுத்தவரையில் இதன் ஒவ்வொரு காட்சியிலும் சோகம் கரைபுரண்டு ஓடும். மேலும் குறைந்த பட்ஜெட்டில் குறைந்த ப்ரோமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்கில் உருவாகி இருக்கின்றது. அத்தோடு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த திரைப்படமாகும்.
இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் மற்றும் பாஷா சும்ப்ளி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், கோவாவில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் பேசிய ஜூரி மற்றும் விழா தலைவருமான நடவ் லாபிட், தி காஷ்மீர் பைல்ஸ் போட்டிப் பிரிவில் அனுமதித்ததற்கு மிகவும் வருத்தம் தெரிவித்தார்.
அத்தோடு தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட ஒரு இழிவான திரைப்படம். கௌரவம் வாய்ந்த இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்டது மிகவும் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாது இந்த படத்தைப் பார்த்தது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகிறது எனவும் கூறி இருக்கின்றார்.
இவ்வாறாக ஜூரி கூறிய கருத்து ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!