• Nov 19 2024

'தி கேரளா ஸ்டோரி' பட விவகாரம்! மேற்கு வங்கம் அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை, மேற்குவங்க மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தடை செய்தது ஏன் என்றும்? தமிழகத்தில் இப்படத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது எதற்காக? என்று உரிய பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் கடந்த மே 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.  அத்தோடு இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கேரள பெண்கள் கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தியதாக இப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான போதே, படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பலர் போர்க்கொடி உயர்த்திய நிலையில், படம் வெளியானது முதலே இஸ்லாம் மதத்தை சேர்ந்த பலர் இப்படம் அமைதியை குலைக்கும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் வகையிலும் உள்ளதாக கூறினர். மேலும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து பல மனு தாக்கல் செய்யப்பட்ட போது... வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, படத்தின் வெளியீட்டில் தலையிட முடியாது என்றும், இப்படத்திற்கு எதிராக இன்னும் எத்தனை மனுக்கள் தான் தாக்கல் செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார். மேலும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர் , நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தி அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.

மேலும் இப்படி பல்வேறு தடைகளை தாண்டி இப்படம் இம்மாதம் வெளியான நிலையில், பல இடங்களிலும் வெற்றிகரமாக இப்படம் ஓடி கொண்டிருக்கும் போது, மேற்கு வங்க மாநிலத்தில் இப்படத்திற்கு தடை விதிப்பதாக அம் மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்தார். எனினும் அதேபோல் தமிழகத்தில் இந்த படம் காவலர்களின் பாதுகாப்புக்கு மத்தியில் மால்களில் மட்டுமே வெளியான போதும், சில இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் 3 நாட்களில் இப்படம் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது.

இவ்வாறுஇருக்கையில்  'தி கேரளா ஸ்டோரி படத்திற்கு' மேற்கு வங்க அரசு தடை விதித்ததை எதிர்த்து இப்படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி... "தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்பட்டு வரும் நிலையில், மேற்கு வங்க அரசு ஏன் படத்தை தடை செய்ய வேண்டும் என கேள்வி உள்ளது? மேலும் இதற்கு விளக்கம் கேட்டு மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி உள்ளார்.

எனினும்  இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும், தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு வரும் மீ 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement