இந்தியில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.சுதிப்தோ சென் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழ்நாடு, கேரளா உட்பட பல இடங்களில் எதிர்ப்பு காணப்பட்டது.
கேரளாவில் இந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைக்கப்படுவதாக இந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.பல்வேறு எதிர்ப்புகளை கடந்து வெளியான தி கேரளா ஸ்டோரி படத்தின் முதல் வாரம் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தி கேரளா ஸ்டோரி, இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துகளுடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த 32000 இந்து பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் காட்டப்பட்டுள்ளது.
அதேபோல், மதமாற்றம் செய்யப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் தி கேரளா ஸ்டோரி படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்துக்கு எதிரான படம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரசாரங்கள் செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், மதநல்லிணக்கத்துக்கு எதிரான படமாக தி கேரளா ஸ்டோரி உருவாகியுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம், நேற்று முதல் திரையிடப்படவில்லை. ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததாலும், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்தன. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் முதல் நாளில் 7.5 கோடி ரூபாய் வசூலித்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் 12.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான நேற்று 16.50 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. ஆக மொத்தம் முதல் வாரம் மொத்தம் 36 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கடும் எதிர்ப்பு காணப்படும் நிலையில், முதல் வாரம் 36 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!