இந்தியாவிலேயே தீபிகா படுகோன் முதல் நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்தும் சாதிக்க முடியாத ஒன்றை தான் சாதித்து விட்டதாக அதா கான் பதிவிட்டுள்ளார். முதன் முறையாக 200 கோடி வசூல் ஈட்டிய உமன் சென்ட்ரிக் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி தான் என பதிவிட்டுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் கேரளாவில் உள்ள இஸ்லாமியர்கள் இந்து பெண்களை மதம் மாற்றம் செய்து வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று தீவிரவாதிகளாக மாற்றி விடுவதாக இயக்குநர் சுதிப்தோ சென் படமாக்கி இருந்தார்.நடிகை அதா சர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேற்கு வங்கத்தில் இந்த படத்தை தடை செய்தனர்.
பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த பாஜகவினரும் இந்த படத்துக்கு பெரும் ஆதரவை கொடுத்தனர். கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட மோடி இந்த படத்தை பாராட்டி பேசி இருந்தார்.வட இந்தியாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு கிடைத்த ஆதரவை போலவே தி கேரளா ஸ்டோரி படத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்த நிலையில், இந்த படம் 200 கோடி வசூலை தற்போது தாண்டி உள்ளது.
இதுவரை எந்த இந்திய உமன் சென்ட்ரிக் படமும் இந்தியாவில் 200 கோடி வசூல் சாதனையை படைக்காத நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் சாதித்துள்ளதாக அந்த படத்தின் நாயகி அதா சர்மா பெருமையுடன் போஸ்ட் போட்டுள்ளார். பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், ஆலியா பட், கோலிவுட் நடிகைகளான நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மல்லுவுட் லேடி சூப்பர்ஸ்டாரான மஞ்சு வாரியர் என யாருமே இந்த சாதனையை இதுவரை செய்யவில்லை என்பதை இதன் மூலம் அதா சர்மா உணர்த்தி உள்ளார்.
Listen News!