• Sep 20 2024

யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த கே.ஜி. எஃப்-2 திரைப்பட பாடல்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உலகமெங்கும் மிகவும் பிரம்மாண்டமாக கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி வெளியான திரைப்படம் கே ஜி எஃப்-2. கே ஜி எஃப் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட கேஜிஎப் 2 பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஃபேன் இந்தியத் திரைப்படமாக வெளியானது.

நடிகர் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி, மற்றும் பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமர செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 2 நாட்களில் 300 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

கேஜிஎப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 50 கோடிக்கு மேல் விற்பனையான நிலையில் பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய கலெக்ஷனை பெற்றது. இந்தப் படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி இதுவரையில் 1200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் தற்போது இணையத்தில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது. அதாவது இந்த படத்தின் பாடல்கள் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 550 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் கடந்துள்ளன. இதை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement