• Sep 20 2024

தனது மனைவியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் நடிகர் சூர்யா-வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றன. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

மேலும் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த விக்ரம் என்னும் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இப்படத்தில் இவருடைய ரோலக்ஸ் பாத்திரமானது அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

இவரின் சிறந்த நடிப்பினால் இவருடைய அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது. மேலும் அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அப்டேட்ஸும் வந்தபடி உள்ளன,

அந்த வகையில் சூர்யா 41 திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக்காகி வரும் சூரரை போற்று திரைப்படத்திலும் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது சூர்யா அவரின் புதிய லுக்கில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. ஜோதிகாவுடன் வெளியே சென்றுள்ள சூர்யா அங்கு ரசிகர் ஒருவருடன் செல்பி எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சூர்யாவின் புதிய லுக்கில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement