• Sep 21 2024

விடுதலை திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- இரண்டு பாகமாக வெளியாகவுள்ளதாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் சூரி நடித்து வரும் திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

அத்தோடு கதாநாயகியாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்து வருகின்றார்.மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக விஜய் சேதுபதியின் கால்ஷீட் இல்லாததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பகுதியில் படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. அங்கு கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த படம் பிரம்மாண்டமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் நீளம் திட்டமிட்டதை விட இருமடங்காகிவிட்டது.அதனால் படத்தை இரு பாகங்களாக வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடவும், இரண்டாம் பாகத்தை அடுத்த மூன்று மாதங்களிலும் வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திலிருந்து வெளியாகும் தகவல் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/LcXVkYfdg0E



பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement