தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் உதயநிதி. இவர் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்.
அதுமட்டுமல்லாது விநியோகஸ்தராகவும் இருக்கிறார். தற்போது அமைச்சராகவும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இந்நிலையில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது.
ஆனால், அதற்கு முன்னதாக அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவே, அமைச்சராகிவிட்டதால் இனி படங்களில் கவனம் செலுத்த முடியாது. ஆகையால், கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாக இருந்த புதிய படத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பொன்றினை விடுத்திருந்தார்.
இவ்வாறாக இப்படத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வந்தது.
அந்தவகையில் படத்திற்கும், கதைக்கும் விஜய் சேதுபதி தான் கச்சிதமாக இருப்பார். ஆகையால், அவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!