லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்த படம் லியோ. உலகம் முழுவதும் லியோ ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிவிட்டது. அதற்கு காரணம் விஜய்யின் வெறித்தனமான நடிப்பும், லோகேஷின் அற்புதமான படைப்பும் சேர்ந்த கலவைதான். மேலும் இப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்திய படமாக வெளியாகி இருக்கின்றது.
கடந்த 19ஆம் தேதி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் எந்த ஒரு குறையும் இல்லாத அளவிற்கு லியோ பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது
உலகளவில் இப்படம் இரண்டு நாட்களில் ரூ. 200 கோடி மயில்கல்லை தொட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது அதன்படி, லியோ படம் தமிழ் நாட்டில் இரண்டு நாட்களில் ரூ. 59 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் முதல் நாள் ரூ. 34 கோடியும், இரண்டாவது நாளில் ரூ. 25 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!