• Sep 21 2024

விரைவில் வெளியாகும் தி லெஜெண்ட் திரைப்படம்.. தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபலம்

tech / 2 years ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோரின் உரிமையாளரான நம்ம அண்ணாச்சி நடிப்பில் வெளியாகும் திரைப்படம் தி லெஜெண்ட். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவாகின்றது.

இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரத்வத்துல நடித்துள்ளார்.மேலும் பிரபு, மயில் சாமி, விஜய் குமார், ரோபோ சங்கர் ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.காமெடி,ஆக்ஷன் ரொமான்ஸ் சென்டிமென்ட் போன்ற அனைத்து காட்சிகளிலும் பின்னி பெடல் எடுக்கிறார். ட்ரெய்லரில் வரும் பல காட்சிகள் மற்றும் அண்ணாச்சியின் உடை போன்றவை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தை நினைவுகூருகின்றது.

பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் லாபத்தை தரும என்பது சந்தேகம்தான், இருப்பினும் துணிச்சலாக இறங்கி பார்க்க முடிவு செய்திருக்கும் அண்ணாச்சியின் இந்த தைரியம் பலரையும் கவர்ந்துள்ளது. அந்தவகையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு அண்ணாச்சியின் பிஸியான நடிகராக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.

இந்நிலையில் இந்த படம் ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement