தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகிய படங்களில் ஒன்று 'தி லெஜண்ட்'. ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ஆனது கடந்த ஜூலை 28-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் நாயகிகளான ஊர்வசி ரவுத்தேலா, கீதிகா திவாரி இருவரும் இப்படத்தின் கதைக்கேற்ப 'ஓகே' வான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தோடு காமெடியனாக வலம் வரும் நடிகர் விவேக் வழக்கமான தனது நடிப்பை வெளிப்படுத்த தவறவில்லை. இப்படத்தில் அவருக்கு மட்டும் லைவ் ஆடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு யோகி பாபு, ரோபோ சங்கர், பிரபு, விஜயகுமார், லிவிங்க்ஸ்டன், சுமன், மன்சூர் அலிகான், திவ்ய தர்ஷினி, முனிஷ்காந்த் அனைவரும் கதாபாத்திரத்துக்கு தகுந்த நடிப்பை பதிவு செய்திருக்கின்றனர்.
இந்தப் படம் ஆனது தமிழ்நாட்டில் மட்டும் 600 இற்கும் அதிகமான திரையரங்குகளிலும், அத்தோடு நாடு முழுவதும் 1200 திரையரங்குகளிலும் வெளியானதாக கூறப்பட்டது. மாஸ் ஆக்ஷன் கமெர்ஷியல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் ஆனது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. எனினும் வசூல் ரீதியாக ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் இதுவரை ரூ. 12.5 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றது 'தி லெஜண்ட்' திரைப்படம். அதுமட்டுமல்லாது இன்றுடன் திரையரங்கில் 25 நாட்களை இப்படமானது நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள முக்கியமான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' தற்போது ஓடிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றி #TheLegendRunningSuccessfully on #25thDay @DirJdjerry @Jharrisjayaraj @_TheLegendMovie pic.twitter.com/yUPXZQxxsH
இதனைக் கதையின் நாயகன் லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதோடு "மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றி" என அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். இவரின் இந்தப் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!