• Nov 14 2024

வந்த வேகத்திலேயே முடிவுக்கு வந்த காதல்- என்ன ஆச்சு லலித்-சுஷ்மிதா சென் உறவு?- இரண்டு மாதத்தில் பிரேக்கப்பா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் சுஷ்மிதா. இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இன்னும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாத இவர் முன்னாள் ஐபிஎல் சேர்மன் மற்றும் தொழில் அதிபர் லலித் மோடியை காதலித்து வருவதாக கூறப்பபடுகின்றது.

மேலும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் முகமாக சுஷ்மிதா சென்னும் காதல் உறவில் இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார்.


அத்தோடு இவர்கள் டேட்டிங் செய்யும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.நாங்கள் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கி உள்ளோம் என்றும் இருவரும் பேட்டிங் செய்து வருகிறோம் என்றும் ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் திடீரென தற்போது நடிகை சுஷ்மிதாசென் லல்லித உடனான புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார் எனவே இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement