இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'.வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'துணிவு' திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Listen News!