• Sep 20 2024

பொன்னியின் செல்வன் படத்தின் 'ராட்சஸ மாமனே' பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ் ஆகியாச்சு

stella / 2 years ago

Advertisement

Listen News!


பொன்னியின் செல்வன் படத்தின் 'ராட்சஸ மாமனே' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான்  “பொன்னியின் செல்வன்”. இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளதோடு இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

மேலும் இப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30ம் திகதி திரைக்கு வர இருப்பதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும்  இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆடியோ வடிவில் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இதில் பொன்னி நதிமற்றும் சோழா சோழா  பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.இந்த நிலையில் ராட்சஸ மாமனே பாடலும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இப் பாடலை மகேஷ் விநாயக் ராம் & பாலக்காடு ஶ்ரீராம் உடன் இணைந்து ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். பாடலாசிரியர் கபிலன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ புதிய நடன காட்சிகளுடன் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement