உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கத்தை விட இந்த வாரம் கூடுதல் சுவாரஸ்யங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி போட்டியாளர்கள் நீதிமன்றம் வரை சென்று வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் மாறி விளையாடி வந்தார்கள்.
21போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15பேர் மட்டுமே உள்ளார்கள்.
வார இறுதி வந்துவிட்ட நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் என்பது குறித்து அனைவரிடமும் கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறுஇருக்கையில், இந்த வாரம் மக்கள் மத்தியில் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.
பொறுத்திருந்து பார்ப்போம் கமல் ஹாசன் காட்டுப்போகும் கார்டில் யாருடைய பெயர் இருக்கப்போகிறது என்று..
Listen News!