• Sep 20 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் வீட்டில் நடந்த முக்கிய நிகழ்வு- வாழ்த்துக் கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த அவரது மனைவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பமாக இருந்தால் எவ்வளவு சந்தோஷம், ஆதரவு என்பதை அழகாக காட்டிவரும் சீரியலாக இது இருந்து வருகின்றது.

4 அண்ணன்-தம்பிகள் ஒன்றாக வாழ்ந்து வரும் இவர்களின் குடும்பத்தை உதாரணமாக வைத்திருப்பவர்கள் அதிகம்.தற்போது இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனத்தின் நிலை என்னவாகப் போகின்றது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமரன், இவர் சுஹாசினி என்ற நடிகையை தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.சுஹாசினி திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு சற்று பிரேக் விட்டுள்ளார்.


அண்மையில் இவர்களின் திருமணநாள் வந்துள்ளது, அவரது மனைவி சுஹாசினி கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டு தங்களது திருமண நாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement