தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் தயாரிப்பாளர்கள் டைட்டில் டீசரை வெளியிட்டு, படத்தில் நடிக்கும் முழு நடிகர்களையும் அறிவித்த பின்பும், தினம் ஒரு அப்டேட் வெளிவந்த வண்ணமே உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் இணைந்தார். மேலும், அவரை படக்குழு வரவேற்ற அழகான வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இப்போது, படத்தில்முக்கிய வில்லனாக நடித்து வரும் நடிகர் சஞ்சய் தத், காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் தனது போர்ஷன்களை முடித்து விட்டதாகவும், இப்பொது அவர் வீடு திரும்ப உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், அதில் சென்னை ஷெட்யூலில் மீண்டும் சந்திப்போம் சார் என்று குறிப்பிட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, விஜய் மாற்று படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்துடன் ‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார்.
Thank you @duttsanjay sir, you’ve been such a sweet & down to earth person.Our entire team enjoyed seeing your performance so close by, you rocked as usual sir.
Eagerly waiting to see you back on the sets in the Chennai schedule.
Meendum sandhippom sir❤️
- With Luv,Team #LEO pic.twitter.com/4bPn09c9Ea
Listen News!