தமிழில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்பொழுது இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.
இது தவிர இவருடைய பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணனுடன் மீண்டும் இணைந்து அகிலன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகியிருந்தது. அதில் ஜெயம் ரவி கடற்படை அதிகாரியாக காணப்பட்டார்.
இப்படத்தின் படப்பிடிப்பு யாவும் முடிவடைந்த நிலையில் , படத்தின் டீசரை ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் அகிலன்' படப்பிடிப்பிற்கு குழு எவ்வாறு கடினமாக உழைத்துள்ளது என்பதை மேக்கிங் வீடியோவாக ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.
இந்த மேக்கிங் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஜெயம் ரவி 'அகிலன்' படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒருவர் கடற்படை அதிகாரியாகவும் மற்றவர் உள்ளூர் சென்னை இளைஞராக நடிக்கிறார். படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!