• Sep 20 2024

ரஜனியின் ஜெயிலர் படத்தில் இணைந்த மலையாள வில்லன் நடிகர்-ரசிகர்களுக்கு வெளியான வெறித்தனமான அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ரஜனி தற்போது ஜெயிலர் எனும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை செல்சன் திலீப்குமார் இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றில் இருந்து துவங்கியது.

அத்தோடு படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் First லுக் போஸ்ட்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஒரு இணைந்துள்ளார். ஆம், நடிகர் விநாயகன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.



மேலும் இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார். அதுமட்டுமின்றி தமிழில் வெளிவந்த திமிரு படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement