• Sep 20 2024

ஷிவினை ட்ரெஸ் மாற்றவிடாமல் எட்டிப்பார்த்த ஆண் போட்டியாளர்கள்--எல்லை மீறும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் கடந்த மாதம் 9ஆம் தேதி ஆரம்பமாகி 33 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் எவிக்சன் யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில், இன்றைய டாஸ்க்கில் அமுதவாணனும் ராபர்ட் மாஸ்டரும் ஷிவினிடம் எல்லை மீறி நடந்துகொண்டது ரசிகர்களை ஷாக்கடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபேக்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் விக்ரமன், தனலட்சுமி தலைமையில் இரண்டு அணிகளாக போட்டியிட்டனர். 

இவ்வாறுஇருக்கையில்  டாஸ்க்கில் சரியாக விளையாடத காரணத்துக்காக ஷிவினுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் டிஆர்பி டாஸ்க்கில் கிழவி வேடம் போட்ட ஷிவின், அதே வேடத்தில் பிக் பாஸ் வீட்டில் நடமாட வேண்டுமென பிக் பாஸ் தண்டனை கொடுக்கின்றார்.

 இதனையடுத்து ரச்சிதா, அமுதவாணன் இருவரும் 'டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்ல தட்டாதே' என்ற மனோரமாவின் பாடலை பாடி ஷிவினை கிண்டல் செய்தனர்.


இந்நிலையில், தண்டனையை ஏற்றுக்கொண்ட ஷிவின், கிழவி போன்று உடை மாற்றுவதற்காக ட்ரெஸ்ஸிங் ரூம் சென்றார். அவரை விடாமல் பின்தொடர்ந்த ராபர்ட் மாஸ்டரும் அமுதவாணனும் இதயம் படத்தில் வரும் 'ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி' தான் என்ற பாடலைப் பாடி கிண்டல் செய்தனர். 

மேலும்  ஒருகட்டத்தில் ஷிவின் ட்ரெஸ்ஸிங் ரூம் சென்ற பின்னரும் கூட, ஸ்கீரினை விலக்கிய ராபர்ட் மாஸ்டரும் அமுதவாணனும் அவரை தொந்தரவு செய்தனர். இதனைத்  தொடர்ந்து அங்கேயே நின்றுகொண்டு ஷிவினை ட்ரெஸ் மாற்ற விடாமல் அட்ராசிட்டி செய்தனர்.


சில நேரங்களுக்குப் பின்னர் அமுதவாணனும் ராபர்ட் மாஸ்டரும் அங்கிருந்து கிளம்பினர். அதன்பின்னரே ஷிவின் ட்ரெஸ் சேன்ஞ் பண்ண சென்றார். ஆனால், இதையெல்லாம் சக போட்டியாளர்களும் கேட்கவில்லை, பிக் பாஸும் கண்டிக்கவில்லை. 



மேலும் இந்த வீடியோவை ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள், ராபர்ட் மாஸ்டரும் அமுதவாணனும் எல்லை மீறி நடப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பெண் போட்டியாளர்களிடம் கொஞ்டம் அட்வான்டேஸ் எடுத்ததால் தான் அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement