கடந்த 2007ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியடைந்த வேட்டையாடு விளையாடு படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்தார்கள். இந்த படம் மூன்று வாரங்கள் வரை ஓடி நல்ல வசூலைக் கொடுத்தது. தன்னுடைய படங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டு உலக நாயகன் கமலஹாசன் தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி அவருடைய மிகப்பெரிய ஹிட் படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்.
1987ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் படம் வெளியானது. தமிழ் நாட்டை சேர்ந்த வேலு நாயக்கர் என்பவர் தாராவியில் தாதாவாக மாறுவது தான் இந்த படத்தின் கதை .சரண்யா பொன்வண்ணன் ஜனகராஜ் நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி ,ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தப்படத்தில் ஒலிப்பதிவு முழுக்க அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றது போல் இருக்கும். அப்போது தமிழ் நாட்டிலிருந்த திரையரங்குகளில் ஒரேமாதிரியான ஒலி அளவை மட்டுமே பயன்படுத்தினர். நாயகன் படம் வெளியான புதிதில் படத்தின் வசனங்கள் புரியவே இல்லை. என்ற ஒரு நெக்கட்டிவ் விமர்சனம் இருந்து வந்தது. இதிலிருந்து தான் மனிரத்தினம் படம் கதை ஒன்றுமே புரியாது என்ற எண்ணமும் ரசிகர்களுக்கு வந்தது. ஃபிலிம்மில் பதிவாக்கப்பட்ட இந்த படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் ஒலி மற்றும், வண்ணம் போன்றவற்றை மெருகேற்றி ரிலீஸ்செய்ய இருக்கிறார்கள்.
கிட்டதட்ட 36வருடம் கழித்து உலகநாயகன் படம் 280 தியோட்டர்களில் வெளியாக இருக்கின்றது. தமிழ் நாட்டில் 120திரையரங்குகள் , கேரளாவில் 60திரையரங்குகள், கர்நாடகாவில் 20 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
உலக நாயகன் கமலஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7 அன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நவம்பர் 03 தேதி அன்று ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.தீபாவளி ரிலீஸிற்கு ஒரு வாரத்திற்கு நாயகன் படம் ரிலீஸ் ஆக இருப்பதல் கண்டிப்பாக நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!