தமிழ் சினிமாவில் 'விக்ரம் வேதா, காலா, ஜெய் பீம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மணிகண்டன். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் நைட்'. இந்தப் படத்தில் 'முதல் நீ முடிவும் நீ' படத்தில் நடித்து பிரபலமான மீதா ரகுநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படமானது இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்து நோக்குவோம்.
படத்தின் கதைக்களம்
அந்தவகையில் முதலில் படத்தின் கதைக்கரு பாரு நோக்குவோம். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன் ( மோகன் ) குறட்டை பிரச்சனையால் அலுவலகம் நண்பர்கள் என அனைவரிடமும் பல தடவை அவமானப்படுகிறார். இதனால் அவரது காதலியும் அவரைப் பிரிந்து சென்றுவிட விரக்தியின் உச்சத்திற்கு செல்கிறார்.
இந்த சமயத்தில் தன்னை ராசி இல்லாதவள் என நினைக்கும் அணு ( மீதா ரகுநாத்) அறிமுகமாக இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் நடந்து முடிகிறது. ஆனால் அவர்களின் முதலிரவில் தான் மணிகண்டனுக்கு குறட்டை பிரச்சனை இருக்கிறது என்ற விஷயம் அனுவுக்கு தெரிய வருகிறது. இதனால் என்ன நடக்கிறது? ஹீரோ தன்னுடைய குறட்டை பிரச்சனையை சமாளிக்க என்னவெல்லாம் செய்கிறான்? ஹீரோயின் இதனை எவ்வாறு கையாள்கிறாள்? என்பது தான் படத்தினுடைய மீதிக்கதை.
படத்திற்கு பக்க பலமாக அமைந்தவை
ஒரு படத்தின் மிகப்பெரிய பலமே கதாபாத்திரங்கள் தேர்வு தான். அந்தவகையில் அறிமுக இயக்குநராக இருந்தாலும் அழகான திரைக்கதை மூலம் இயக்குநர் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளார் என்றுதான் கூற வேண்டும்.
மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக தேர்வு செய்து அனைவரிடமும் மிகச் சிறந்த நடிப்பை வெளிக் கொண்டுவந்துள்ளார்.
அதேபோன்று மணிகண்டன் மோகன் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார். இருப்பினும் தனது நடிப்பினால் மீதா ரகுநாத் பல இடங்களில் பேசாமலேயே தமது நடிப்பால் கைதட்டல்களை வாங்குகிறார்.
அதுமட்டுமல்லாது ரமேஷ் திலக், பக்ஸ் என படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
தொகுப்பு
எனவே மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஒரு பீல் குட் படமாக இந்த 'குட் நைட்' அமைந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
Listen News!