விஜய் டிவியின் சிறந்த நிகழ்ச்சிகளில் ஒன்றான 'சூப்பர் சிங்கர்' மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் அஸ்வின், புகழ், மணிமேகலை இவர்களுடன் இணைந்து ஷிவாங்கி அடித்த லூட்டி ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் விதவிதமான கெட்டப்புகள் மூலமும், நகைச்சுவை நிறைந்த கதைகளின் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்த ஷிவாங்கி, அந்த கெட்டப்புகளில் போட்டோஷுட் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன்மூலம் லட்சக்கணக்கான பாலோவர்களையும் பெற்றார்.
அதுமட்டுமல்லாது இந்த டிவி நிகழ்ச்சிகள் இவருக்கு சிறந்த பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. அந்தவகையில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார். அத்தோடு வடிவேலுவுடன் இணைந்து 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஆரம்பமாகியுள்ள குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியில் இருந்து குக்காக ஷிவாங்கிக்கு ப்ரமோஷன் கிடைத்திருக்கின்றது. அதில் அவர் கடந்த இரண்டு வாரங்களாக தன்னுடைய டிஷ்களால் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.
அந்தவகையில் இந்த வார நிகழ்ச்சியில் கயிறுகட்டி கோலா உருண்டை மற்றும் செட்டிநாடு கிரேவி செய்து நடுவர்களை அசத்தியுள்ளார். இதனையடுத்து ஷிவாங்கி குக் ஆயிட்டாடா என்று செஃப் தாமு பாராட்ட, புகழ் உள்ளிட்ட அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரிக்க ஷிவாங்கி கண்கலங்கிய அந்தத் தருணம் ஆனது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் வெற்றியாளராகவும் ஷிவாங்கி அறிவிக்கப்பட்டார்.
Listen News!