கடந்த 2015 ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை. இத்திரைப்படம் வெளியாகி நேர்மறையான விமர்சனத்தை பெற்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ரவிக்குமார் அயலான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்துக்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அந்த வகையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள "வேற லெவல் சகோ" என்ற பாடல் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், படத்தின் நிறைவு பணிகளும் முடிவுற்று படம் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. இப்படம் விரைவில் ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிவிழா சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. வெற்றி விழா நிகழ்வின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அந்தவகையில் கமல்ஹாசன் அவர்களை அறிமுக இயக்குநர் ரவிக்குமார் சந்தித்தது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில் நான் வியந்து பார்க்கும் ஆளுமை அவரோடு எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்து வைத்ததும் டைம் ட்ராவல் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டது இன்னும் வியப்பு . அவருடன் பேசிய நிமிடங்கள் வாழ்வில் பரவசம் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Listen News!