• Sep 21 2024

ரசிகர்களிடையே சூப்பர் ரெஸ்போன்ஸ்களைப் பெற்று வரும் இரவின் நிழல் திரைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து இயக்குநராக அவதாரம் எடுத்திருப்பவர் தான் பார்த்திபன். இவரது இயக்கில் ஒத்த செருப்பு என்னும் திரைப்படம் முதலில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இரவின் நிழல் என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

இன்டிபென்டன்ட் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இப்படம் ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.இப்படம் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கூட திரையிடப்பட்டது.முதலில் ஜுன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட இந்த படம் பிறகு ஜுலை 15 ம் தேதிக்கும், ஜுலை 27 ம் தேதிக்கும் மாற்றி வைக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் அன்சென்சார்ட் ப்ரீமியர் ஷோ இன்று திரையிடப்பட்டது. இதன் விமர்சனங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.அதாவது எடிட்டரே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள முதல் படம் இது தான். இந்த படத்தின் எடிட்டர் பார்த்திபன் தான். அதுவும் கதையில் மட்டுமே அவர் திருத்தங்களை செய்துள்ளார்.இந்த படத்தில் லீட் ரோலான நண்டு என்ற ரோலில் பார்த்திபன் நடித்துள்ளார்.

இளம் நடிகையான பிரிகிதாவின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளி குவித்து வருகிறது.அர்ப்பணிப்பின் உணர்வில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கலாம்.படத்தின் முதல் 30 நிமிடங்கள் படம் உருவாக்கப்பட்ட விதம் தொடர்பான மேக்கிங் வீடியோவை காட்டுகிறார்கள். அதைத் தொடர்ந்து 100 நிமிடங்கள் சிங்கிள் ஷாட் படம். முதல் 30 நிமிடத்திலேயே படம் பார்க்கும் அனைவரையும் மிரள வைத்துள்ளனர்.

பார்த்திபனின் படைப்பு திறன் முழுமையாக வெளிப்பட்டுள்ள படம். ஒரு மனிதனின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டி உள்ள படம் என்றே கூறலாம். கண்ணீர், ரத்தம், வலி கலந்து உணர்வு ரீதியாக படத்தை எடுத்துள்ளனர். படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

படத்தின் பின்னணி இசை, படத்தின் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. த்ரில்லிங் நிறைந்ததாக இருந்தாலும் படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளனர். பார்த்திபனின் வித்தியாசமான முயற்சி, திறமையின் வெளிப்பாடு, படம் இயக்கி உள்ள விதம் ஆகியவற்றிற்கு ஆடியன்ஸ் செம ரெஸ்போன்ஸ் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement