• Nov 10 2024

வெளியான 'தி லெஜண்ட்' படம்…விடுமுறை அளித்த தமிழக அரசு…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவராகவும், சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளராகவும் இருப்பவரே சரவணன் அருள். இவர் தற்போது ஹீரோவாக 'தி லெஜண்ட்' படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்கியுள்ளனர். மேலும் லெஜண்ட் சரவணன் இப்படத்தில் ஒரு விஞ்ஞானியாகவும் நடிக்கிறார்.

நடிகை ஊர்வசி ரவுத்தேலா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதுமட்டுமன்றி இத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகையான இவர் முதன் முதலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களோடு இணைந்து விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்

இந்தநிலையில் 'தி லெஜண்ட்' படமானது இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படமானது தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பான் இந்தியா படம் என படக் குழுவினர் கூறி வருகின்றனர்.

அறிவியல் புனை கதையினை மையமாகக் கொண்டமைந்திருக்கும் இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேற்குறிப்பிட்டது போல் இப்படத்தில் சரவணன் அருள் ஒரு விஞ்ஞானியாக நடித்திருக்கின்றார். முன்னதாக படம் குறித்த ப்ரோமோஷன் விழாக்களில் நாயகன் சரவணன் அருள் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

அதுமட்டுமல்லாது இதில் ஹரிஸ் ஜெயராஜ் இசையும் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது. முன்னணி நாயகிகளை முன்னிறுத்தி வெளியான இவரது டிரைலரும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகி உள்ள இப்படத்தின் வசூல் குறித்த எதிர்பார்ப்பு தான் தற்போது ஹாலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறிக் கொண்டுள்ளது. இப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இந்தப் படம் காமெடி ஸ்கூப் திரைப்படம் என கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்று 'தி லெஜண்ட்' படத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

அதாவது இன்று நடைபெற உள்ள மாபெரும் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம் பிரதமரின் வருகை, போட்டியாளர்களின் வருகையால் வாகன நெரிசல் இவ்விடங்களில் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது 'தி லெஜெண்ட்' படத்திற்கு சாதகமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் படத்தின் நாயகன் சரவணன் அருள் உட்பட படக்குழுவினர் அனைவரும் முதல் நாள் ஓப்பனிங் நல்ல கல்லாகட்டும் என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். அத்தோடு நெட்டிசன்கள் 'தி லெஜெண்ட்' படத்திற்காகவே நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமது பாணியில் கூறி வருகின்றன. அதுமட்டுமல்லாது இப்படம் கட்டாயம் வெற்றிப்படமாகவே அமையும் எனவும் படத்தை பார்த்த ரசிகர்கள் கூறிச் செல்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement