• Sep 20 2024

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..எப்போது என்று தெரியுமா?

tech / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதனிகா நடித்துள்ளார். மற்றும் சிம்புவின் தாயாக ராதிகா நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த மாதம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால் அவரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் உருவானது. இதன் காரணமாக வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைக்கப்பட்டது.

mpu

சமீபத்திய தகவலின்படி வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரையும் அழைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement