• Sep 20 2024

புதிய குணசேகரன் என்ட்ரி..? அந்தக் கால் இந்த நடிகரின் உடையது தான்... 'எதிர்நீச்சல்' சீரியலில் நடக்கவுள்ள டுவிஸ்ட்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. ஆனாலும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்துவின் இறப்பைத் தொடர்ந்து இந்த சீரியலினைப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.


இதனையடுத்து அடுத்த ஆதிகுணசேகன் யார் என்ற கேள்வி பல நாட்களாக எழுந்து வருகின்றது. வேல ராமமூர்த்தி, பசுபதி, ராதாரவி எனப் பலரின் பெயர்கள் அடிபட்டாலும் இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.


இந்நிலையில் நேற்றைய எபிசோட் முடிவில் காரில் இருந்து வெள்ளை வேஷ்டி கட்டிய நபர் இறங்கி வருவது போன்ற காட்சிகள் வெளியாகி இருந்தது. ஒருவேளை அவர் தான் ஆதி குணசேகரனாக இருப்பாரோ என்ற எண்ணம் பலரின் மனதில் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது ஆதி குணசேகரனின் அண்ணன் கதாபாத்திரமாக கூட இருக்கலாம் எனவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.


எது எவ்வாறாயினும் இன்றைய எபிசோட்டில் அது யாருடையது என்பது தெரிந்து விடும். இருப்பினும் ரசிகர்கள் காலை வைத்தே அது யாருடைய காலாக இருக்கும் எனக் கண்டுபிடித்து வருகின்றனர். அதாவது குறித்த கால் கொஞ்சம் வெள்ளையாக இருப்பதனால் வேல ராமமூர்த்தியாகவோ, பசுபதியாகவோ இருப்பதற்கு சான்ஸ் இல்லை எனக் கண்டுபிடித்துள்ளனர்.

அத்தோடு இது ஒருவேளை பிரபல நடிகரும், இயக்குநருமான அழகம் பெருமாளின் காலாக கூட இருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர். உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement