• Nov 19 2024

லியோ படத்தின் டைட்டிலால் ஏற்பட்ட புதிய பிரச்சினை- அடக்கடவுளே முதலே இதை பற்றி யோசிக்கமாட்டீங்களா?- குழப்பத்தில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 67வது படம் தான் லியோ. மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில், சென்னை ஷெட்யூல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட ப்ரமோவை போலவே இப்படத்திலும் விஜய்யை வைத்து பக்கா மாஸ் காட்டியிருப்பார். அவ்வாறு இருக்கையில் இப்படத்தின் டைட்டிலுக்கு எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறது லியோ காபி நிறுவனம்.


இவ்வாறு நிறுவனத்திடம் எந்த ஒரு உரிமமும் பெறாமல் இவர்கள் வைத்த பெயரின் மூலம் படத்திற்கு ஃப்ரீ ப்ரமோஷன் செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் பிரச்சனை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் படத்தின் பப்ளிசிட்டிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.


மேலும் இத்தகைய பெயர் மக்களிடையே எளிதாக சென்றடையும் என்பதற்காகவும் பிளான் போட்டு செய்ததாக இருந்து வருகிறது. இருப்பினும் லியோ பெயரில் ஏற்கனவே காபி நிறுவனம் இருப்பதால் இதில் காப்பிரைட் பிரச்சனை வருமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழ தொடங்கி உள்ளது.இதனால் படக்குழுவினரும் குழப்பத்தில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement