• Sep 20 2024

கையில் உடுக்கையுடன் மிரட்டல் போஸ் கொடுக்கும் தனுஷ்... வெளியானது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் நியூ போஸ்டர்

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படம் இவ்வாண்டு இறுதியில் உலக அளவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ்  நடிப்பில் வெளியாகயுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது கசிந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் தற்போது அது தொடர்பான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்பொழுது தனது 50வது திரைப்பட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இரண்டாவது முறையாக இயக்குனராக களமிறங்கும் நடிகர் தனுஷ், எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் தான் தனுஷ் 50. தற்பொழுது இந்த திரைப்பட பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் அவருடைய 49வது திரைப்படமாக வெளியாக உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்பொழுது வெளியாகி வருகிறது.


பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்பொழுது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.  


விரைவில் அந்த முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவித்துள்ளது, "புரட்சி ஓங்குக" என்கின்ற போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது. கையில் உடுக்கையுடன் மிரட்டலாக போஸ் கொடுக்கும் தனுஷ் அவர்களுடைய அந்த போஸ்டர் தற்பொழுது மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement