• Sep 20 2024

மாஸாக வெளிவந்த 'சூது கவ்வும்-2' படத்தின் புது போஸ்டர்... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியளவில் எதிர்பார்ப்பில்லாமல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'சூது கவ்வும்'. ரூ.2 கோடி பட்ஜெட் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மொத்தமாக ரூ.35 கோடி வசூல் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.


இதனையடுத்து ரசிகர்கள் சூது கவ்வும் 2 படத்தின் அறிவிப்புக்காக காத்திருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூது கவ்வும் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது கூறப்பட்டது. மேலும் 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாது இவருடன் இணைந்து கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி, யோக் ஜாப்பி, ஹரிஷா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு அர்ஜுன் தான் 'சூது கவ்வும் - 2' படத்தை இயக்குகிறார்.


இந்நிலையில் தற்போது சூது கவ்வும் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சூது கவ்வும் திரைப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சூது கவ்வும் 2 திரைப்படத்தில் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 

Advertisement

Advertisement