ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஜூன் 2ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் ஜவான். இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருகான் மற்றும் நயன்தாரா ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
மும்பையில் நடந்து வரும் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். இதையடுத்து, ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.ஆனால், படப்பிடிப்பு முடிந்தாலும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு நேரம் எடுக்கும் என்பதால் ஜவான் படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், பட ப்ரோமோஷனை அவசரப்படாமல் நிதானமாக செய்ய அட்லி திட்டமிட்டுள்ளதால், வெளியீட்டு தேதியை மாற்றுவது குறித்து ஆலோசனைகள் நடத்தி வருவதாக பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் சஞ்சய் தத்தை கேமியோ ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக இந்த கதாபாத்திரத்திற்கு அல்லு அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்து வருவதால், இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!