• Sep 22 2024

'தளபதி67' படத்தில் கையாளும் புதிய ருவிஸ்ட்; அப்டேட்ஸ் வராததற்கு லோகேஷ் கூறிய காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 66 படமான வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.வாரிசு திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார் இத்திரைப்படத்தில் சரத்குமார் பிரகாஷ்ராஜ் குஷ்பு பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் இத்திரைப்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் தளபதி 67 வது படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற ஒரு பேச்சு இணையதளத்தில் கசிந்து வந்தது.அந்தவகையில் 67வது படம் இயக்குநர் லோகேஷ் இயக்க உள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் ரோல் என்ன என்பது பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதன்படி தனது அடுத்த படம் கேங்ஸ்டரை மையமாகக் கொண்டு உருவாகும் என்று கூறியுள்ளார்

மேலும்,நரேன், அர்ஜுன் தாஸ், ஜாபர் ஆகியோர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது, விக்ரம் படத்தில் பயன்படுத்திய LCU டெக்னிக்கை இப்படத்திலும் பயன்படுத்துவரா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி 67 வது படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.விக்ரம் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தளபதி67 படத்தில் பணிபுரிவார்கள் என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் தளபதி 67 குறித்து பேசிய லோகேஷ் "தயாரிப்பு நிறுவனம்" தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதைப்பற்றி பேச முடியும். மேலும் தற்போது அவர் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை முடித்தபின் தளபதி 67 குறித்து அப்டேட் வரும் என பேசியுள்ளார்.அதன்படி கமலின் விக்ரம் கதாபாத்திரத்தைப் போல விஜய்க்கு Spinoff திரைப்படம் எடுத்தால் இந்த கதாபாத்திரத்தை விரும்புவீர்கள் என கேட்கப்பட்டது.அதற்கு லோகேஷ் கனகராஜ் "கில்லி படத்தில் வேலு கதாபாத்திரம் தான்" என பதிலளித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement