• Sep 21 2024

சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர்….நடிக்கவிருக்கும் 90-களின் நாயகன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகெங்கும் புகழ்பெற்ற சேனல்களில் ஒன்று சன் டிவி.தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை சீரியல்களுக்கு பேர் போன சேனலாக சன் டீவி உள்ளது.

இச்சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகிறது.

இதில் ஒளிபரப்பாகும் கயல், ரோஜா, வானத்தை போல, சுந்தரி போன்ற சீரியல்கள் மக்கள் இடத்தில் பெரிதும் பிரபல்யமானவை.

இந்நிலையில், சன் டிவியில் ஓடிக் கொண்டிருந்த பூவே உனக்காக என்ற தொடர் சமீபத்தில் முடிவிற்கு வந்தது.

இதனால் இதற்குப் பதிலாக மற்றுமோர் புதிய தொடர் ஒன்றினை ஒளிபரப்ப உள்ளனர்.

இத்தொடரில் 90-களில் தொலைக்காட்சித் தொடர்களிலும், படங்களிலும் கலக்கி வந்த நடிகர் ராகவ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement