• Sep 21 2024

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவும் உள்ளார்.

இதனை சன்பிக்சர்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.இந்த படத்தில் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றி படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், பிரமாண்டமாக தயாராகவிருக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement