• Sep 20 2024

ரொமான்ஸில் களைகட்டும் புதுமணத் தம்பதிகள்... முதலில் புகைப்படம் அடுத்து வீடியோவா...? ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆதி. இவர் மிகக் குறைந்த அளவிலான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஸ்மார்ட்டான தோற்றம் மற்றும் நேர்த்தியான நடிப்பு மூலம் பல ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். இவர் குறிப்பாக 'மிருகம்' என்ற திரைப்படத்தில் மனிதர்களுக்கான அடிப்படை குணங்கள் கூட இல்லாத மிருகம் போன்ற பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.


அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 'ஈரம், மரகத நாணயம்' என்று வெவ்வேறு வேடங்களில் அசத்தினார். அதே போல நடிகை நிக்கி கல்ராணியும் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு பார்ட் 2' உள்ளிட்ட பல ஜாலியான படங்களில் நடித்து பல ராசிகளின் மனங்களில் குடியிருக்கின்றார்.



இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வந்த ஆதி - நிக்கி கல்ராணி இருவரும் காதலில் விழுந்து கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கடந்த மே மாதம் பிரமாண்டமாக நடந்தது.


இத்திருமண நிகழ்வில் மெஹந்தி, சங்கீத் போன்ற சடங்குகள் நடத்தப்பட்டதோடு அதில் நடிகர் ஷிரிஷ், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள் வெளியாகி இணையத்தில் லைக்ஸை குவித்தன.


இதனைத் தொடர்ந்து தற்போது ஆதி தனது மனைவி நிக்கி கல்ராணிக்கு லிப்லாக் கிஸ் கொடுக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். இவ்வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement