• Sep 20 2024

அடுத்த ஆதி குணசேகரன் வேல ராமமூர்த்தி இல்லையா..? பிரபல சினிமா நடிகர்களை தட்டித் தூக்கவுள்ள சன் டிவி.. மீண்டும் சூடுபிடிக்கவுள்ள 'எதிர்நீச்சல்' சீரியல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர் நீச்சல்' தொடரானது எப்போதுமே முன்னிலை வகிக்கும் ஒரு சீரியலாக இருந்து வருகின்றது. பெண் அடிமைத்தனத்தைக் கதைக்களமாக கொண்ட இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகர்கள் அனைவருமே ஏதோ ஓர் வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். 


அந்தவகையில் இந்த சீரியலில் உள்ள அத்தகைய ஒரு அருமையான கதாபாத்திரம் தான் ஆதி குணசேகரன். இந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் இவரின் திடீர் உயிரிழப்பானது சீரியல் குழுமத்திற்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் ஒரு பேரிழப்பாகப் பார்க்கப்படுகின்றது. இதனையடுத்து 'எதிர்நீச்சல்; சீரியலில் அடுத்த ஆதிகுணசேகரன் யார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.


இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது. ஆனால் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால், 'எதிர்நீச்சல்' தொடரில் நடிப்பது மிகவும் கஷ்டம் என்பது போல்  வெளிப்படையாக கூறி இருக்கின்றார்.


எனவே இதனையடுத்து சன் டிவி குழுமத்தினர் நடிகர் ராதாரவி மற்றும் நடிகர் பசுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கதகவல் வெளியாகி இருக்கின்றது. எது எவ்வாறாயினும் வேல ராமமூர்த்தி, ராதாரவி, பசுபதி ஆகிய மூவரிலும் யார் அடுத்த ஆதி குணசேகரனாக நடிக்கின்றார் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement