• Nov 17 2024

அடுத்ததாக ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் இப்படித்தான் இருந்திருக்கும்..? 'எதிர்நீச்சல்' இயக்குநர் பகிர்ந்த தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரனாகவே ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்த இவர் ஒரு திறமையான நடிகர். எதிர் நீச்சல் சீரியலின் முழு வெற்றிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது அந்த சீரியல் நடிக்கும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் சீரியலை தூக்கி நிறுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது ஆதிகுணசேகரன் கதாபாத்திரம்.


மாரிமுத்துவின் இறப்பைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் காலியாகவே இருந்து வருகின்றது. இதனால் அடுத்து ஆதி குணசேகரன் யார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.


இந்நிலையில் இந்த சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் மாரிமுத்து குறித்துப் பல விடயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது அவரிடம் அதில் மாரிமுத்து சார் இல்லாத எதிர்நீச்சல் சீரியல் முதல் நாள் எப்படி இருந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் "அவர் இல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் 3,4 நாட்கள் உட்கார்ந்து இருக்கோம், ஆனால் யாருமே சரியா பேசல, அவர் இருந்தால் சத்தம் போட்டிட்டு ஜாலியா இருப்பார், இப்போ ரொம்ப சைலண்டாக சூட்டிங் நடந்திட்டு இருக்கு" என்றார்.


மேலும் ஒரு எபிசோட்டில் ஆதி குணசேகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுப் போய் விட்டார் என்பதும் அனைவரும் அழுதது நடிப்புக்காக அழல, நிஜமாகவே அழுதிட்டாங்கள், அவர் இல்லை என்பது எல்லாருக்குமே ஓர் வலி தான்" எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது "நாங்க recollection ஆக அவரைக் காட்டிற்றே இருக்கலாம், ஆனால் அவரை மறுபடி காட்டும் போது ஒரு மாதிரி மன அழுத்தமாக இருக்கு, ஒரு ரசனைக்குரிய விடயமாக இருக்குமான்னு தெரியல" எனவும் மிகவும் எமோஷனலாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு "அடுத்ததாக இந்த சீரியலின் கதைப்படி ஆதி குணசேகரன் தான் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக இல்லையா என எண்ணி தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திற மாதிரி காட்சிகள் எல்லாம் இருந்திச்சு,  ஆனால் மாரிமுத்து அந்த டேட் சினிமாவிற்காக கொடுத்ததால் அந்தக் காட்சிகளை எடுக்க முடியாமல் போயிடிச்சு" எனவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் திருச்செல்வம். 

Advertisement

Advertisement