• Sep 20 2024

டாடா படத்திற்கு பிறகு அடுத்தடுத்து வரும் படவாய்ப்பு..கவின் பற்றி வெளியான சூப்பர் நியூஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ' சரவணன் மீனாட்சி‘ தொடரின் மூலம் பிரபலமானவர் கவின். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மூன்றாவது சீசனில் கலந்துக்கொண்ட இவருக்கென்று தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடிப்பில் 'லிப்ட்' என்ற படம் வெளியானது. ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான 'லிப்ட்' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


இதன் பிறகு  டாடா என்ற படத்தில் நடித்து மக்களின் மனதை வென்றுவிட்டார், கார்த்தி, தனுஷ் என நிறைய பிரபலங்கள் டாடா படத்தில் நடித்த கவினின் நடிப்பை பாராட்டி இருந்தார்கள்.

எனினும் தற்போது கவினை வைத்து படங்கள் இயக்க பல இயக்குநர்கள் விருப்பம் காட்டி வருகின்றனர்.இவ்வாறுஇருக்கையில் தான் கவினின் அடுத்த பட இயக்குநர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.


அதாவது நடன இயக்குநர் சதீஷ் ஒரு புதிய படம் இயக்க அனிருத் இசையமைக்க ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறார்களாம்.

விரைவில் இப்படம் குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.





Advertisement

Advertisement