• Nov 17 2024

அரசியலின் அடுத்த நகர்வு... தூய்மைப் பணியாளர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து... தேசியக் கொடியை ஏற்றிய விஜய் மக்கள் இயக்கம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 


அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  தொகுதி வாரியாக முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்த விஷயமானது அவரின் அரசியல் பயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக பலராலும் பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமட்டுமல்லாது சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூரில் திடீர் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணிக் கூட்டம்  பனையூரில் நடைபெற்றதோடு, மறுநாள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி கேரள மாநில ரசிகர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


மேலும் அப்பேத்கர் பிறந்தநாள் தொடக்கம் பல முக்கிய நிகழ்வுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் நேற்றைய தினம் 77-ஆவது தந்திர தினம் கொண்டாடப்பட்டது.  


இதனை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மைப் பணியாளர்களை கொடி ஏற்ற வைத்து பலரது மனதையும் ஈர்த்துள்ளனர். அந்தவகையில் அரசியல் தலைவர்களும், அரசியல் பிரபலங்களும் மட்டுமே கொடி ஏற்ற வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று பல காலமாக இருந்து வருகின்றது. அனால் கோவை சுந்தராபுரத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பு விருந்தினர்களாக அரசியல் தலைவர்கள் எவரையும் அழைக்காது அப்பகுதியில் நீண்டகாலமாக தூய்மைப் பணியாளர்களாக இருந்து வந்த பழனியம்மா, மணி ஆகியோரை அழைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர். 


அதுமட்டுமல்லாது அவர்களுக்கு இனிப்பு, மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கௌரவப் படுத்தியுள்ளனர்.  ஆகவே இதுவும் விஜய்யின் அரசியல் பயணத்திற்கான ஒரு அத்தியாயம் தான் எனப் பலரும் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement