நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது 'கேப்டன் மில்லர்' திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றது. இதனையடுத்து தனுஷ் இயக்குநர் சேகர் கம்முலா படத்திலும், இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'D 50' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அத்தோடு இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனுஷ் இன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டையடித்து இரு மகன்களுடன் மனமுருகி தரிசித்திருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது லியோ படத்திற்கும், தனுஷ் மொட்டை அடித்ததற்கும் சம்மந்தம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ்ஜின் 'விக்ரம்' படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடித்ததைப் போல, லியோ படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இந்த விஷயம் உறுதி செய்யப்படாவிட்டாலும், படக்குழு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே 'லியோ' படத்தில் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரித்துள்ளது.
Listen News!