விக்ரம் படத்தை தொடர்ந்து, மீண்டும் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையான ரோலில் நடிகர் சூர்யா, முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற மாஸ் கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'விக்ரம்'.மேலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.சூர்யா இந்த படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், மிகப்பெரிய அளவில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
மேலும் இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா தயாரித்து நடித்து, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்த 'சூரரை போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் நடிகர் சூர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து மீண்டும் மற்றொரு முன்னணி நடிகரின் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையான ரோலில் படு மாஸ் கெட்டப்பில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இது குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலில் இயக்குனர் சங்கர், ராம்சரனை வைத்து தற்போது இயக்கி வரும் ஆர் சி 50 என்கிற படத்தில் தான் சூர்யா ரோலக்ஸ் கேரக்டருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இது குறித்த தகவல் தற்போது வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
தற்போது இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூர்யா 'வனங்கான்' படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.மேலும் இதைத்தொடர்ந்து சுதாகர் சிறுத்தை சிவா ஞானவேல் ஆகியோர் இயக்கத்தில் அடுத்தடுத்து சூர்யா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நடிகை ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம்-யார் மாப்பிள்ளை தெரியுமா..?
- தனுஷ் ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் செய்தி… அடுத்தடுத்து மூன்று படம்?
- ஷங்கரின் மகள் அதிதியை தாக்கி பேசிய நடிகை ஆத்மிகா- பொங்கி எழும் ரசிகர்கள்..வைரலாகும் ட்வீட்..!
- வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்-உலகம் முழுவதும் இத்தனை கோடியா..?
- ஐஸ்வர்யாவை யாரும் ஏமாற்றவே முடியாது: மனைவி பற்றி தனுஷ் கூறிய விசயம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!