விஜய் டிவியில் கடந்த 2017ம் அண்டு ஆரம்பமான ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமாகவுள்ளது.இந்த முறை பல வித்தியாசமான முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் வீடு இரண்டு வீடாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.. அவருக்கு சம்பளமாக 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சீசனில் பங்கேற்கவுள்ள 10 போட்டியாளர்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது, நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ரவீனா, ஜோவிகா, தர்ஷா குப்தா, குமரன், இந்திரஜா, விஷ்ணு, சத்யா, அனாயா, மூன்நிலா, பப்லு பிரித்விராஜ் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
பின்னணி பேசுபவர், மாடல், சின்னத்திரை பிரபலங்கள், நடிகர்கள் என இந்த லிஸ்ட்டில் பலதரப்பினரும் இணைந்துள்ள நிலையில் போட்டியின் விதிமுறைகளும் பலமாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த முறை அதிகமான சுவாரஸ்யங்களுடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!